18 வயது வரை சராசரி வாழ்க்கை நடத்திவந்த கேய்லே மோட்சுக்கு இடியாய் அமைந்தது மருத்துவ ரிப்போர்ட்.
MRI ஸ்கேனில் கேய்லே மோட்சுக்கு கருப்பை, கருப்பை வாய் மற்றும் யோனி இல்லை என்பது தெரியவந்தது.
அதாவது Mayer-Rokitansky-Kuster-Hauser syndrome எனும் பாதிப்பினால் பெண்ணுறுப்பு மற்றும் கருப்பை முழுமையாக வளர்ச்சி அடையாமல் போனது.
இதுபோன்ற பாதிப்பு 4500-ல் ஒருவருக்கு தான் ஏற்படும், இப்பிரச்சனை மரபணு வேறுபாடுகள் காரணமாக கூட இருக்கலாம் என மரபணு ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மோட்ஸ் மற்ற பெண்களை போல குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த பாதிப்பினால் தனது எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற உணர்வுகள் அவரின் மனதில் அச்சமாக இருந்து வருவதால், அதை தனது காதலனிடம் கூறவும் அஞ்சுகிறார்.
ஆனால், இதை அறிந்த பிறகு அவரது காதலன் உறுதுணையாக தான் இருந்து வருகிறார்.
கேய்லே மோட்ஸ்-வின் இப்பாதிப்பினை குறித்து அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்தால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள $15,000 செலவாகும், அறுவை சிகிச்சை மூலம் வெற்றி காண 96% மட்டுமே வாய்ப்புகள் உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்காக கேய்லே மோட்ஸ் இதுவரை $12,000 வரை பண உதவியை ஈட்டியுள்ளார், மேலும் இவருக்கு உதவி செய்ய ஆன்லைன் நன்கொடை GoFundMe எனும் தளம் மூலம் பலரும் பண உதவிகளை செய்து வருகிறார்கள்.