ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66ஆவது ஆண்டு விழா மாநாட்டிற்கு இதுவரை எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66அவது மாநாடு எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்கு எனக்கும், கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சுதந்திர கட்சியின் ஆலோசகர் என்ற வகையில் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என அண்மையில் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழ் அமைச்சர் W.D.J. செனவிரத்னவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இதே கருத்தை ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீரவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனக்கும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பலருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.