Loading...
காரைநகர் களபூமிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கோயில் திருவிழாவிற்காக வந்த குறித்த இளைஞன் தனது உறவினருடன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோதே குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.
Loading...
மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியருகே இருந்த பனை மரத்துடன் மோதியதிலேயே, மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...