டிராகன் பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை போலவே காணப்படும், இது ஒரு கற்றாழை குடும்பத்தைச் சார்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பழத்தின் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும்.
இதன் மையத்தில் இனிப்புக் கூழ், சிறு கருப்பு விதைகள், வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒரு பழம் 700 முதல் 800 கிராம் எடையை கொண்டது.
இந்த பழத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் 100 கிராம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோராயமாக,
நீர் – 80-90 கிராம்
கார்போஹைட்ரேட்கள் – 9-14 கிராம்
புரதம் – 0.15-0.5 கிராம்
கொழுப்பு – 0.1-0.6 கிராம்
இழை – 0.3-0.9 கிராம்
சாம்பல் – 0.4-0.7 கிராம்
கலோரிகள் – 35-50
கால்சியம் – 6-10 மி
இரும்பு – 0.3-0.7 மிகி
பாஸ்பரஸ் – 16 – 36 மி.கி.
விட்டமின்கள் – A,C,B1,B2,B3
மருத்துவ பயன்கள்
டிராகன் பழம் உடம்பிற்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.
டிராகன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கிறது.
விட்டமின் B3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் பருமன் இல்லாமல் நல்ல சீரான உடலமைப்பை உருவாக்குகிறது.
கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமையாக்குகிறது, மேலும் பார்வையை மேம்படுத்துகிறது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.