Loading...
உலகின் மிக உயரமான மணல் கோட்டை ஜெர்மனியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது. சர்வதேச மணல் சிற்பக் கலைஞர்கள் குழுவினரால் குறித்த கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த குழுவினரின் முதலாவது முயற்சி தோல்வியடைந்த நிலையில், தோல்வியை கண்டு துவளாமல்,, மீண்டும் தமது உழைப்பைச் செலவளித்து குறித்த கோட்டையை உருவாக்கியுள்ளனர்.
Loading...
அத்துடன் தோல்வியில் கிடைத்த பாடங்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த கோட்டை தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மாதக்கால முயற்சியின் பயனாக இம்மணல் கோட்டை நிறைவு செய்யப்பட்டுள்ளது.இம்மணல் கோட்டையை தயாரிப்பதற்கு சுமார் ஆயிரம் தொன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது சுமார் 16 தசம் 68 மீற்றர்களுக்கு எழுந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...