Loading...
ஒடிசாவில், சுந்தர்கர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மண்டியாகுடார் குடியிருப்புப் பகுதியில் ஆண் யானை ஒன்று நுழைந்துள்ளது.
இதனை கண்ட மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Loading...
அப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அசோக் பார்தி என்ற நபர், யானையை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து யானையின் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரை பிடித்த யானை காலில் போட்டு மிதித்துள்ளது.
இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அசோக் பார்தியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
Loading...