Loading...
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்‘ என்னும் அமைப்பை உருவாக்கி உள்ளன.2006–ம் ஆண்டு 4 நாடுகளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முதல் மாநாடு 2009–ல் ரஷியாவில் நடந்தது. 2010–ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவும் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தது.
கடந்த ஆண்டு மாநாடு இந்தியாவின் கோவா நகரில் பிரிக்ஸ் மாநாடு நடந்தது. இதைத் தொடர்ந்து 9–வது பிரிக்ஸ் மாநாடு சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஷியாமென் நகரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 5–ந்தேதி வரை நடக்கிறது.
இந்தநிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா புறப்பட்டு சென்றார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாதம் குறித்து மீண்டும் குரல் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியாமென் பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து 3 நாள் பயணமாக 5–ந்தேதி மோடி அண்டை நாடான மியான்மர் செல்கிறார். அவர் தலைநகர் நாபிதாவில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகருமான ஆங்சான் சூகியை சந்தித்து பேசுகிறார்.
Loading...