யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் இருந்தே இசைப்பிரியா கைது செய்யப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், பலர் காணாமலும் போயிருந்தனர்.
இது போன்ற சம்பவங்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றிலிருந்து இசைப்பிரியா கைது செய்யப்பட்டார்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது ஜகத் ஜயசூரிய போன்றவர்கள்தான் அனைத்துக்கும் பொறுப்பாக இருந்தார்கள்” என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இது போன்ற சம்பவங்களுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.