Loading...
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஜுனைத் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, துப்பாக்கியை கையில் வைத்திருந்தவாறு சிறுவன் ஜுனைத் செல்பி எடுக்க முயற்சித்தார்.
எதிர்பாராத விதமாக சிறுவன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். அதில், துப்பாக்கி குண்டானது சிறுவனது தலையில் பாய்ந்தது.
பின்னர், காயமடைந்த நிலையில் ஜுனைத் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளான். அவனது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜுனைத் வைத்திருந்த துப்பாக்கி அவனது வீட்டின் அருகில் உள்ள கலே என்பவர் சட்டவிரோதமாக வைத்திருந்தது என விசாரணையில் தெரியவந்தது. போலீசார் கலேவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி உடன் செல்பி எடுத்து சமூக வளைதளங்களில் பதிவிட வேண்டும் என்று சிறுவன் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது.
Loading...