முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து பேசப்படவுள்ளது.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவரே போர்க்குற்றம் இடம்பெற்றதென வெளியிட்ட கருத்துக்கள் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளதோடு, பொன்சேகாவுக்கு எதிராக எதிர்ப்புகளும் வெளிக்கிளம்பியுள்ளன.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது. இக் கூட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதியால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.