Loading...
சந்நிதி ஆலயத்தில் இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம்(05) இடம்பெற்ற ஆலயத்தின் தேர்த் திருவிழாவின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
ஆலயத்தின் வடக்கு வீதியில் கடையுடன் சேர்ந்து அர்ச்சனைத் தட்டு விற்பனை நிலையத்தில் குறித்த பெண் பணத்ததை திருடியுள்ளார்.
குறித்த பெண்ணை ஆலய வளாகத்தில் தேடிப்பிடித்த கடை உரிமையாளர் அவரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், தான் பணத்தை திருடியதை குறித்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
Loading...