நாட்டில் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட அரசாங்கமாக தற்போதைய நல்லாட்சி திகழ்கிறது.
எமது கடன்சுமைக்கான தீர்வை எமது காலத்திலேயே பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாம் வாக்குறுதி அளித்திருந்தோம். அதன்பிரகாரம் கடன் சுமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 71ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சித் தலைமையகமான சிறிகோத்தாவில், இன்று நடைபெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து உரை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“சர்வதேச நாடுகளிடம் இருந்து எமக்கு ஏராளமான வரப்பிரசாதங்கள் கிடைத்து வருகின்றன. கடந்த காலங்களில் நாம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். குறிப்பாக நாட்டில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக நாம் உறுதியளித்திருந்தோம். அதன்பிரகாரம் 4 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
“இனிவரும் காலங்களில் அந்த 4 இலட்சம் வேலைவாய்ப்புகளில் வருமானத்தை அதிகரிப்பதுடன், மேலும் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவுள்ளோம்” என்றார்.