பிக் பாஸ் நிகழ்ச்சி இன்றைக்கு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது என்று சொல்லலாம், இன்றைய நிகழ்ச்சியில் ஆர்த்தி மற்றும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது அந்த டாஸ்க்கில் அவர்கள் இருவரும் ஒரு நாற்காலியில் அமர வேண்டும் என்றும் அந்த நாற்காலியில் இருந்து அவர்கள் எழுதிரித்தால் முதலில் எழுந்திரிபவர்களின் பெயர் எலிமினேஷனிற்கு நேரடியாக நோமின்டே செய்யப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து கணேஷ் மற்றும் ஆர்த்தி அந்த நாற்காலியில் அமர வீட்டில் உள்ள மற்றவர்கள் இருவரையும் அந்த நாற்காலியில் இருந்து எழுப்ப பல முயற்சிகள் எடுத்தனர். அதில் ஆர்த்தி மீது முட்டை, அழுக்கு நீர், குப்பை, மாவு என அனைத்தையும் அவர் தலையில் கொட்டினர்.
எந்த வித தொந்தரவாக இருந்தாலும் அவர்கள் அந்த நாற்காலியை விட்டு எழுந்திரிக்க கூடாது. சுஜா மற்றும் ஜூலி ஆர்த்தி மீது உள்ள கோபத்தில் பலி தீர்த்து கொண்டார்கள் என்று தான் மக்கள் மத்தியில் பேச படுகிறது.
அதைத்தொடர்ந்து, கணேஷ் வெங்கட்ராமனையும் அந்த நாற்காலியில் இருந்து எழுப்ப, பல தொந்தரவு செய்தனர். அதில் சினேகன் செய்தது தான் மிகவும் கொடூரம். கணேஷ் மீது மிளகாய் தூளை தண்ணீரில் கலக்கி ஊற்றிவிட்டார்.
அதை பார்த்த வீட்டில் உள்ளவர்களுக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஜூலி தான் “ஹைலைட்” இந்த டாஸ்க் மூலம் நன்றாக நடித்து, அழுது மற்றும் அவர்களுக்காக பிராத்தனை செய்து, பெயர் வாங்கிக் கொண்டார் ஜூலி.