Loading...
காவிரி மேலாண்மை வாரியம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 54-வது நாளாக நீடித்தது. அப்போது, விவசாயிகள் நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து சாமியார் போல் வேடமிட்டு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.
Loading...
இதுபற்றி அவர்கள் கூறுகையில், ‘விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாதவர்களை இந்த அரசு சாமியாராக்கி விட்டது என்பதைத்தான் இந்த போராட்டத்தின் மூலம் நாங்கள் வெளிப்படுத்தினோம்’ என்றனர்.
Loading...