Loading...
மெக்ஸிக்கோவின் தெற்கு கடற்கரை அருகாமையில், இன்று, 8.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜப்பானுக்கு சொந்தமான பொனின் தீவிற்கு அருகில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Loading...
இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள இந்த போனின் தீவுக்கு சொந்தமான சிமோடா தீவில் கடலுக்கு அடியில் 450 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Loading...