வங்காள தேசம் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது.
டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்டகாங்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் முதல் டெஸ்டில் 9 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் 13 விக்கெட்டும் வீழ்த்தினார். 2-வது டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர், தொடர் நாயகன் விருதை வார்னர் உடன் இணைந்து கைப்பற்றினார்.
சிறப்பாக செயல்பட்டதால் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் முதல் முறையாக 10 இடத்திற்குள் வந்துள்ளார் லயன்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் நாதன் லயன் 17-வது இடத்தில் இருந்தார். தற்போது 9 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் 12-வது இடத்தை பிடித்ததுதான் இவரது சிறந்த தர வரிசையாக இருந்தது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா முதல் இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்திலும், அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இரண்டு டெஸ்டிலும் சதம் அடித்த வார்னர் ஒரு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 6-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.