Loading...
கன்னடப் பத்திரிகை ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான கெளரி லங்கேஷ் கொலை தொடர்பில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இது போன்ற விடயங்கள் இந்தியாவில் நடக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
”இவ்வாறான விடயங்கள் இந்தியாவில் நடக்குமாக இருந்தால், இது என் இந்தியா அல்ல. என் இந்தியா முன்னேறுகின்ற, அன்பு கொண்ட நாடாக இருக்கவே நான் விரும்புகிறேன்,” என்றும் இசைப்புயல் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மும்பையில் நடைபெற்ற ”ஒன் ஹார்ட்” திரைப்பட சிறப்புக்காட்சியின் போது மூத்த பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் வினவப்பட்டது.
கெளரி லங்கேஷ், பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை (05) இரவு 8 மணி அளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
Loading...