Loading...
கீரைகள் மட்டுமின்றி அவற்றின் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன. தண்டுக்கீரையின் விதையில் ‘குளூட்டன்’ எனப்படும் புரதம் கிடையாது. எனவே குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாக உட்கொள்ளலாம்.
கீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.
Loading...
ஒரு கோப்பை கீரை விதையில் 26 கிராம் புரதச் சத்து உள்ளது. அத்துடன், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.
கீரை விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
Loading...