எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசேட பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அரசியல் கிசுகிசுக்களை வெளியிடும் கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்று இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம்பந்தன், ஊருக்கு சென்று திரும்பும் போது வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வந்து சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதனை வழமையாகக் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அண்மையில் ஊடக விடயங்களுடன் தொடர்புடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விசேட வகையான பரிசு ஒன்றை சம்பந்தன் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு முருங்கைக்காய்களை சம்பந்தன் அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதனை பெற்றுக்கொண்ட குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் தலைவர் தமக்கு இவ்வாறான ஓர் பொருளை பரிசளித்தார் என்பதனை நினைத்து வியப்பில் ஆழ்ந்தார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.