ஜப்பானில் இருந்து மங்கோலியா வழியாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு பயணிகள் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சைபீரியன் ரெயில்வே போக்குவரத்து நிர்வாகம் இதை செயல்படுத்துகிறது.
பெய்ஜிங்கில் இருந்து மாஸ்கோ வர குறைந்த பட்சம் 15 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இங்கிலாந்துக்கு ரஷியா வழியாக புதியரெயில் விட திட்டமிடப்பட்டுள்ளது.
13,500 கி.மீட்டர் தூரம் பயணிக்க கூடிய இத்திட்டத்தை ரஷிய அரசு செயல்படுத்த உள்ளது. லண்டனில் இருந்து புறப்படும் பயணிகள் ரெயில் ரஷியாவின் மையப்பகுதி வழியாக ஜப்பானின் வாக்கானனையை சென்றடைய உள்ளது.
முன்னதாக இந்த ரெயில் ஜெர்மனி மற்றும் போலந்து வழியாக வந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைகிறது. ரஷியாவில் இருந்து கிழக்கு கடல் பகுதியை கடக்க 45 கி.மீ தூரத்துக்கு பாலம் கட்டப்பட உள்ளது. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜப்பான் அதிகாரிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.