புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தொடுனர் மற்றும் எதிரி தரப்பின் தொகுப்புரைகள் இன்று தீர்ப்பாயம் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் “ட்ரயலட் பார்” முறையில் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றைய நாள் தொகுப்புரைகளுக்கான நாளாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், வழக்கின் தொடுனர் தரப்பு தொகுப்புரைகள் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் முதலாம் மற்றும் ஏழாம் எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என தீர்ப்பாயம் முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய எதிரிகளுக்கு எதிராக சாட்சியங்கள் இருப்பதாகவும் பிரதி மன்றாடியர் அதிபர் தீர்ப்பாயம் முன்னிலையில் கூறியுள்ளார்.
இந்நிலையில், முதலாம் மற்றும் ஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.