தனது சகோதரன் செலுத்திய வாகனம் மோதியதால் உயிரிழந்த இருவரின் குடும்பங்களின் நலன்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளை தான் பார்த்துக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் வாகனம் மோதியதில் இரு சகோதரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலன்நறுவை- ஹிங்குரக்கொட வீதியில், ஏதுமல்பிட்டிய பிரதேசத்தில் காலை 1.20 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சகோதர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ஜனாதிபதியின் சகோதரர் எனக்கூறப்படும் நபரின் வாகனம் மோதியுள்ளது.
இதில் ஒருவர் சிறுநீரக நோயாளி எனத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்களின் மோட்டார் சைக்கிளை மோதிய சந்தேகநபர் உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
எனினும் அவர் பின்னர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
இதேவேளை விபத்தில் உயிரிழந்த சகோதரர்களின் வீடுகளுக்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.
இதன்போது அவர் குடும்பத்தின் நலன்கள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகள் தொடர்பில் தான் கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மனமுடைந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.