Loading...
யாழ் சாவகச்சேரிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இரவர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கள் நேற்றிரவு புகுந்த இனம் தெரியாத நபர்கள் மேற்படி வாள்வெட்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரியவருகின்றது.
கிராம்புவில் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கள் இனம் தெரியாத நபர்கள் நுழைந்த போது வீட்டில் உள்ளவர்கள் திருடன் திருடன் என் கத்தியதாகவும் இதன் போது அயலில் உள்ளவர்கள் வீட்டை நோக்கி ஓடி வந்ததாகவும் அவர்கள் மீதே வாள் வெட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இச் சம்பவத்தில் கிராம்புவில் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன், சுஜீபன்பரமேஸ்வரன் சுஜித்தா, மற்றும் ஜெயரட்ணம் சிறிராஜ் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...