தியாகராஜன் குமாரராஜாவின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கதாபாத்திரத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளத்தை கலக்கியுள்ளது.
‘ஆரண்ய காண்டம்’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார்.
இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நதியா, மிஷ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத்.
‘அநீதி கதைகள்’ என பெயரிடப்பட்டு உருவான இப்படம், தற்போது ’சூப்பர் டீலக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி, தற்போது அந்த கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா.
மேலும் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.