தேவையான பொருட்கள் :
முட்டை – 5
மிளகாய் தூள் – 1 கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ
வெங்காயம் – 1
தேங்காய்பால் – அரை கப்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மைதா – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
4 முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து 2 துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத்தை மிக பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு, மிளகு துள் போட்டு கலக்கி வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்.
பின்னர் உருண்டையை கையில் வைத்து வட்டமாகத் தட்டி நடுவில் பாதி முட்டையை வைத்து மூட வேண்டும்.
அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் பிரட்டி வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதம் பிரட்டி வைத்துள்ள முட்டையை எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.
சூப்பரான முட்டை ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி.
குறிப்பு..
உருளைக்கிழங்குடன் மட்டன், சிக்கம் கீமாவையும் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும்.
– இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.