Loading...
மியன்மாரில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் வீசாவை ரத்துச் செய்ய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மியன்மார் சுற்றுலா விசாவை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்கள் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வரலாம் என்ற காரணத்தின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.
அவ்வாறான செய்திகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.
Loading...
Loading...