Loading...
மட்டக்களப்பு ஏறாவூரில் ஏழு வயது சிறுமி ஒருவருக்கு தாயால் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.நேற்று இரவு 8 மணியலவில் ஏறாவூர் பள்ளியடி வீதியில் வசிக்கும் சிறுமி ஒருவருக்கே இவ்வாறு சூடு வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கபடுவதாவது நேற்றைய தினம் சமய வகுப்புக்கு சென்ற வேளை தனது கையில் இருந்த மோதிரம் தொலைந்துள்ளது.
Loading...
இதை அவதானித்த தாய், கோபமடைந்த நிலையில் தனது பிள்ளைக்கு கரண்டியை நெருப்பில் காய்த்து சூடு வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் தாயை கைது செய்துள்ளதுடன், பிள்ளையை ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...