கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் சிறுமி ஒருவரை அநுராதபுரத்துக்கு அழைத்துச் சென்று மனைவியாக்கி அவருடன் ஒன்றாக வசித்து வந்த நபர் ஒருவரை கொச்சிக்கடை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொச்சிக்கடை- ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்றில் உயர் பதவியில் பணியாற்றி வந்த சந்தேகநபர் சிறுமியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
11 வயதுடைய குறித்த சிறுமி அடிக்கடி உதவிகளுக்காக அத்தொழிற்சாலைக்கு வருபரென்றும் தெரியவந்துள்ளது.
அதன்போது, 35 சயதான இரு பிள்ளைகளுக்கு தந்தையான குறித்த நபர் சிறுமியுடன் பேசிப் பழகியிருந்த நிலையில் சிறுமியும் அந்த நபருடன் காதல் வயப்பட்டுள்ளார்
இதனையடுத்து இருவரும் அநுராதபுரத்துக்கு தப்பிச் சென்று கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமியை தேடிய பெற்றோர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன் பின்பு கொச்சிக்கடை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் சந்தேகநபர் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.