ரஷ்யாவில் கடந்த 18 ஆண்டுகளாக முப்பது பேரை கொன்று நரமாமிசம் சாப்பிட கணவன்- மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு ரஷ்யாவை சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ், இவரது மனைவி நடாலியா.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று நரமாமிசம் உண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் சோதனை நடத்தினர்.
அப்போது, மனித சதை மற்றும் தோல் உட்பட உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதனப் பெட்டியிலும், ஜார்களிலும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உறுப்புகளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இறந்தவர்களின் உடல் உறுப்புகளுடன் செல்பி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது, இதனையடுத்து இவர்களை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.