நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். உடலில் தேவையற்ற கொழுப்பு என்னும் எதிரியை அழிக்கும் வலிமையான நண்பன் நாம் பருகும் தண்ணீர். நமது உடல் எடையை பராமரிக்க உதவும் முக்கியமான ஒரு ஆதாரம் இந்த தண்ணீர். தண்ணீர் ஏன் தேவை என்பதன் எளிமையான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
நீங்கள் குடிப்பது தண்ணீர் மட்டும் தான் அதிக கலோரி உள்ள, சுவையூட்டிகளால் நிரப்பப்பட்ட குளிர் பானமோ, பால் சேர்க்கப்பட்ட காபியோ இல்லை. இதுவே உங்கள் கலோரிகள் குறைவதற்கு தீர்வாக இருக்கும். தண்ணீர் பருகுவதால், நீங்கள் உண்ணும் உணவின் அளவு குறைந்து, வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.
உணவு அல்லது சிற்றுண்டி எடுத்துக் கொள்ளும் முன்னர் தண்ணீர் பருகுவதால், விரைவில் உங்கள் வயிறு நிரப்பப்படும். தாகத்திற்கு பசிக்கும் வேறுபாடு உள்ளது. உணவு அருந்தும் முன் சிறிதளவு தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் பசியும் குறையும்.இன்னும் பல நன்மைகள் தண்ணீர் பருகுவதால் உணடாகின்றன.
தண்ணீரின் அளவு, ஒருவரின் ஆரோக்கியத்தை பொறுத்து உள்ளது. செயலாற்றல் அளவு, இருக்கும் இடம், வெப்ப நிலை போன்றவற்றை கொண்டு நீரின் தேவை வேறுபடுகிறது. ஒரு நாளில் 8 க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 9 கிளாஸ் தண்ணீர் குடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆகவே மருத்துவர்கள் கூறுவது ஒரு எச்சரிக்கையின் நிமித்தமாகத்தான். அதிகமாக தண்ணீர் பருகுவதால் உடலில் நீர்சத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நீர்வறட்சியை போல் இதுவும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தாகம் எடுப்பது குறையும் போது தண்ணீர் சரியான அளவில் உடலில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். சிறுநீர் சுத்தமாக மற்றும் இள மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போதுமான அளவு நீர் உடலில் உள்ளது என்பதை காட்டும் அறிகுறியாகும். தண்ணீர் உடலுக்கு நல்ல பலனை கொடுக்கும். ஆகவே தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.