இந்த பனிப்பிளவானது அண்டார்டிகாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய பனிப்பிளவாகும்.
உலகின் 5 வது மிகப்பெரிய கண்டம் அண்டார்டிகா, புவியின் தென்முனையில் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பைன் தீவு பனிப்பாறையில் ஏற்பட்ட பிளவால், 266 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள பனிப்பாறை ஒன்று பிரிந்துள்ளது.
இது பைன் தீவு பனிப்பாறையானது அண்டார்டிகாவிலேயே மிகவும் வேகமாக உருகும் பனிப்பாறையாகும்.
இந்த பனித்தீவு முழுவதுமாக உருகிவிட்டால் உலகின் ஒட்டுமொத்த கடலின் நீர்மட்டம் 1.7 அடி அளவு அதிகரிக்கும். எனவே ஆராய்ச்சியாளர்கள் இந்த பனிப்பாறையை கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.
உலக வெப்பமயமாதலின் காரணமாக அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் நாளுக்கு நாள் உருகி வரும் நிலையில் பூமியானது ஒரு பேராபத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதையே இந்த பனித்தகர்வுகள் நமக்கு காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.