உக்ரைன் சேர்ந்த பாடகியான Natalia Dzenkiv என்பவர் துருக்கி நாட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த துருக்கி விமான நிலையத்திற்கு வந்தபோது, சோதனை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இவரது பாஸ்போட்டை சோதனை செய்தபோது அதில் இவரது வயது 41 ஆக இருந்தது. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக 20 வயது பெண் போன்று இவர் காட்சியளித்துள்ளார்.
இதனால், வேறொரு பெண்ணின் பாஸ்போட்டில் இவர் பயணித்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டுள்ளார்.
இவர் டிக்கெட் புக் செய்திருந்த விமானத்தில் பயணிக்காமல், சோதனைகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு வேறு விமானத்தில் பயணித்துள்ளார்.
இதுகுறித்து இவர் கூறியதாவது, எனது அழகினை பார்த்து பலரும் வியந்துள்ளார்கள், பலரும் என்னிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கியுள்ளார்கள்.
ஆனால், முதல்முறையாக எனது அழகின் காரணமாக தர்மசங்கடமான நிலைக்கு ஆளானேன் என கூறியுள்ளார்.