புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தீர்ப்பு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகிறது.
332 பக்கங்களைக் கொண்ட இந்த தீர்ப்பை, மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் தலைவரான, நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வழக்கில், வித்தியாவின் தாயார் வழங்கிய சாட்சியம் மற்றும் அரசதரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட சுரேஸ்கரன் வழங்கிய சாட்சியம் என்பனவற்றை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அதேவேளை, இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையானோர் நீதிமன்றில் கூடியுள்ளனர்.