Loading...
தேவையான பொருட்கள் :
சாமை சாதம் – ஒரு கப்,
எலுமிச்சம் பழம் – ஒன்று,
எண்ணெய், உப்பு – தேவைக்கு,
பச்சை மிளகாய் – 2,
கடுகு – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வறுத்த வேர்க்கடலை – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம், மஞ்சள் தூள் – சிட்டிகை.
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
Loading...
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து அதில் வடித்த சாதம் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு கலந்து பரிமாறலாம்.
சூப்பரான சாமை எலுமிச்சை சாதம் ரெடி.
Loading...