பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பலவித காரணங்கள் இருக்கலாம்.
1) கருப்பையில் புழுக்கள் இருந்தால்
மிளகு, வெள்ளைப்புண்டு, வெள்ளைக்குன்றிமணி வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைச் சாரணை வோ் வகைக்கு 5 காசு எடை எடுத்து துளசிச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து வீட்டு விலக்கான மூன்றாம் நாள் காலை மட்டும் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
புங்கன் வேர் எலுமிச்சையளவு அரைத்து விலக்கான மூன்று நாள் சாப்பிட மலட்டுக்கிருமிகள் செத்துவிடும்.
விழுதி வேர் 2 பலம் இடித்து 1 படி தண்ணீரில் போட்டு அரைக்கால்படியாக காய்ச்சி வடிகட்டி விலக்கான நாட்களில் கொடுக்க மலட்டுப்புச்சிகள் சாகும்.
2) உறவுக்கு பின் அடி வயிறு குத்தல் , வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிடவும்
3) உறவுக்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன்
நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுக்க குழந்தை உண்டாகும்.
4) உறவுக்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து புசி உறவு கொள்ள சரியாகும்
வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.
கல்யாண முருங்கைப் புவுடருடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.
அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.
இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.
மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சுரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.
அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.
பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்
மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.