ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடிதெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்து இருக்கிறார். ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்,அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார். விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகிறார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
அஞ்சலி ஆரம்ப காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மறுத்து வந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
திரைப்படத்தில் நடிக்க வருவது பற்றி ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த அஞ்சலி தங்கை ஆரத்யா, “கதைக்கு ஏற்ற பாத்திரங்களில், கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். எனது புதிய படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.