கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவின் `வேலைக்காரன்’ படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `அறம்’ படம் அந்த இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தணிக்கை குழுவின் முடிவு வர தாமதமானதால் படம் சரஸ்வதி பூஜைக்கு ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தணிக்கை குழுவில் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு ‘அறம்’ பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ‘அறம்’ உருவாகியுள்ளது.
படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி ரேசில் விஜய்யின் `மெர்சல்’ படமும், அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா’ படமும் ரிலீசகா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.