தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷின்வத்ராவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் அரிசி மானியத் திட்டத்தில் சுமார் 8 பில்லியன் டொலர்கள் வரை இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலேயே அவருக்கு இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.
2014 இல் தாய்லாந்தில் இடம்பெற்ற இராணுவ சதிக்கு இரண்டு வாரங்களின் முன்னர், ஆரம்பமான இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுக்களையெல்லாம் நிராகரித்திருந்த ஷின்வத்ரா, வழக்கின் தீர்ப்பு வௌியாவதற்கு முன்னர் நாட்டிலிருந்து வௌியேறி, துபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.
அரிசி மானியத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதை ஷின்வத்ரா அறிந்திருந்த போதும், அதனைத் தடுக்க அவர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.