யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவால் வாடுவோர் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.
ஆனால் வித்தியா ஆசையாக வளர்த்த நாய் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.வீட்டின் கடைக்குட்டியான வித்தியா தன்னுடைய நாய்க்கு ஆசையாக “குட்டி” என பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளார்.
இந்த நாய் சிறு பருவத்திலிருக்கும் போது வித்தியாவுக்கு கிடைத்துள்ளது.
உயிர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் வைத்துள்ள வித்தியாவுக்கு இந்த நாயை கண்டதும் பிடித்துப்போயுள்ளது.இந்த நாயை மிகவும் ஆசையாக வித்தியா வளர்த்து வந்ததாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.
எனினும் வித்தியாவின் மறைவுக்குப் பின்னர் இந்த நாய் கவலையாகவும் சோர்வாக இருந்ததாகவும் வித்தியாவின் தாயார் தெரிவித்தார்.
வித்தியாவின் 45ஆம் நாள் நினைவு தினத்தின் போது வித்தியா புதைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்த குட்டி, வித்தியா புதைக்கப்பட்ட இடத்தை சுற்றி வந்ததையும், அவ்விடத்தில் இருந்ததையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.
வித்தியாவின் புகைப்படத்தைக் காட்டியதும் ஓடி வந்து அப்புகைப்படத்தையே பார்த்துக்கொண்டு இருக்குமாம் இந்த குட்டி.
வித்தியா மீது இந்த நாய் கொண்டிருக்கும் அன்பை பார்க்கும் போது அனைவர் மனதிலும் ஒரு பரிவு எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றவாளிகள் 7 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன், 30 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 30, 000 ரூபா தண்டப்பணமும், வித்தியாவின் குடும்பத்தாருக்கு தலா 10 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.