Loading...
உலக மரபுரிமை தளமான காலி கோட்டைக்குள் பாரவூர்திகள் பிரவேசிக்க எதிர்வரும் முதலாம் திகதி முதல் முற்றாக தடைவிதிக்கப்படவுள்ளது.
காலி மரபுரிமை மன்றத்தின் தலைவர் சன்ன தாஸ்வத்த இதனை தெரிவித்துள்ளார்.
அதனை பாதுகாக்கும் நோக்கிலே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
காலி கோட்டை பகுதிக்குள் பாரவூர்திகள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
எனினும் அந்த சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Loading...