அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தின் போது மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கான அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு மில்லியன் கணக்கான பணங்கள் பரிமாற்றப்பட்ட தகவல்களும் உள்ளன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி தெரிவித்துள்ளார்.
பிரிவினை வாதத்திற்கு துணையாகச் சென்று ஜே.வி.பியின் கொள்கையை அழிக்க வேண்டாமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரோஹண விஜயவீர மக்கள் விடுதலை முன்னணியை உருவாக்கியதற்கான காரணத்தினை தற்போதுள்ள ஜே.வி.பி.யின் உறுப்பினர்கள் மறந்து விடக்கூடாது.
நாட்டில் புதிய அரசியலமைப்பானது பிரிவினையை மையப்படுத்தியே முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் பின்னணியில் பல்வேறு புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள்.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தின் போது மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கு மில்லியன் கணக்கான பணங்கள் பரிமாற்றப்பட்ட தகவல்களும் உள்ளன.
அந்த வகையில் பார்க்கின்ற போது மக்கள் விடுதலை முன்னணியினர் எந்த அடிப்படையில் வாக்களித்தார்கள் என்ற சந்தேகம் எழுகின்றது.
ஆகவே உரிமைகளுக்கான உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையை சீரழிக்க வேண்டாமெக் கோருகின்றேன் என்றார்.