மேற்கிந்திய எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், அதிஷ்டவசமாக மழை பெய்ததால் டக்வார்த் லூயிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே நடைபெற்றிருந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றும் ஒரு போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டிருந்த நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய நான்காவது போட்டி நேற்று கென்னிங்டன், ஓவல் கிரிக்கெட் மைதானம் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அடுத்தடுத்து ஷாய் ஹோப் 11 ரன்களிலும், மார்லன் சாமுவேல்ஸ் 1 மற்றும் சிக்ஸ்சர் மன்னன் கிரிஸ் கெய்ல் வெறும் 2 ஓட்டங்களுக்கும் இங்கிலாந்து அதிரடி பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றனர்.
எனினும், 6.1 ஓவரில் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் களமிறங்கிய ஜேசன் முஹமத், எல்விஸ் லூயிஸ்சுடன் இணைந்து, நான்காவது விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
இங்கிலாந்து அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தினை அடில் ரஷித்தின் அபார பந்து வீச்சின் மூலம் ஜேசன் முஹமத்தை 43 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.
எனினும், அதனையடுத்து இணைந்து கொண்ட ஜேசன் ஹோல்டர் மற்றும் எல்விஸ் லூயிஸ் அதிரடியாகஓட்டங்களை குவித்தனர். 130 பந்துகளை எதிர்கொண்ட எல்விஸ் லூயிஸ் 130 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸ்சர்கள் உள்ளடங்கலாக 176 ஓட்டங்களையும் ஜேசன் ஹோல்டர் 62 பந்துகளில் 77 ஓட்டங்களையும் விளாசினர்.
அந்த வகையில், 50 ஓவர் நிறைவில், மேற்கிந்திய அணி இங்கிலாந்து மண்ணில் தமது அதிகூடிய ஓட்டங்களான 365 ஓட்டங்களை பதிவு செய்து வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.
கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்காக 126 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.
அதிரடியாக துடுப்பாடிய ஜேசன் ரோய் 66 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்ஸ்சர்கள் உள்ளடங்கலாக 82ஓட்டங்களை ஓட்டங்களை விளாசினார்.
எனினும், ஜேசன் ரோய்யின் ஆட்டமிழப்புக்கு பின்னர் இங்கிலாந்து அணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. 181 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களமிறங்கிய மொய்ன் அலி அதிரடியாக துடுப்பாடி அணியின் ஓட்டங்களை உயர்த்தினார்.
ஐந்து விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வார்த் லூயிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டம் நிறுத்தப்படும் போது, அதிரடியாக துடுப்பாடிய மொய்ன் அலி 25 பந்துகளில் 48 ஓட்டங்களையும் புட்லர் 35 பந்துகளில் 43 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தனர்.
அபராமாக பந்து வீசிய அல்சாரி ஜோசப் ஜேசன் ரோய் உட்பட 56 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகனாக எல்விஸ் லூயிஸ் தெரிவானார்.
இவ்விரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை இலங்கை நேரப்படி மாலை ஐந்து மணிக்கு ரோஸ் பௌல், சதம்டன்னில் நடைபெறவுள்ளது.