அந்தக் கனவு முழுமையாக நனவாவது, முதலமைச்சர் அவர்களே திறந்து வைப்பதேயாகும். அதுவே அக்கலைச் சிகரத்திற்கு சரியான, தகுதியான மரியாதையாகும்.
புரட்சித் தலைவர் அவர்களின் நூற்றாண்டு விழாக்காலத்தில் அவர் தனக்கு இணையாக போற்றிய சிவாஜிக்கு சரியான மரியாதை கிடைக்க வேண்டுமென்பதே வேண்டுதல்.
சிலை அகற்றப்படும்போதே அது அதிகமான மக்கள் வந்துசெல்லும் இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்கிற உணர்ச்சிகரமான தீர்மானத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றி அதன் சாரத்தை அன்றைய முதல்வரிடம் கடிதமாகவும் கொடுக்கப்பட்டது.
மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் தன் மனதிற்கு நெருக்கமான விஷயமாக, சிவாஜிக்கு மணிமண்டபம் எழுப்புவது, அதை கோலாகலமான விழாவாக்குவது என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார்…
அவர் இருந்திருந்தால் தம் பொற்கரங்களாலேயே திறந்து வைத்திருப்பார். இச்சூழலில் மாண்புமிகு முதலமைச்சர் மணிமண்டப திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தத்திற்குரியது. இதுவே ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் உணர்வும், குரலும், எதிர்பார்ப்பும், இக்கருத்தின் அடிப்படையிலேயே மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் கடிதம் கொடுக்க அறக்கட்டளை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.