கடந்த வாரம் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் ஸ்பெஷலாக நயனும் விக்கியும் இணைந்திருக்கும் படங்கள் வைரலாகின.
இதைக் கண்டு பலரும் இந்த ஜோடி சூப்பர் என்று சிலாகிக்கும் நிலையில் அது சில தயாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.
நயன் இப்போது ஒரு படத்துக்கு நான்கு கோடி வரை சம்பளமாக வாங்குகிறார். தமிழில் முன்னணி ஹீரோவுக்கு நிகரான மார்க்கெட் நயனுக்கு இருக்கிறது. எனவே நயனை லீட் ரோலாக்கி சில படங்கள் உருவாகி வருகின்றன.
நயன் தாராவுக்கு திடீர் திருமணம் என்றால் அத்தனை படங்களும் பாதிக்கப்படும். என்னதான் முன்னணி ஹீரோயினாகவே இருந்தாலும் திருமணம் ஆகிவிட்டால் பழையபடி ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள்.
எனவே நயன் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று நயனை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் வேண்டி வருகிறார்களாம்.