படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த தினத்தன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்றை வித்தியாவின் தாயார் வெளியிட்டுள்ளார்.
வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
“வித்தியா கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு சடலத்தை கொண்டு வருவதற்கு முன்னரே கொலையாளிகள் சிலர் எமது வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் தான் எங்கள் மகளை கொலை செய்திருப்பார்கள் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
இதன்போது வித்தியாவினால் வளர்த்த ஆடு, கொலையாளிகளை கொம்பில் முட்டியது. ஆடு முட்டியதும் கொலையாளியின் தங்கை “எங்கள் அண்ணாவை ஆடு முட்டுகின்றது” என கூச்சலிட்டவாறு ஓடி வந்தார்.
ஏன் மகளின் ஆட்டுக்கு அருகில் சென்றீர்கள் என நான் அவரிடம் கேட்டேன். அதன் பின்னர் அவர்கள் ஆட்டினை தாக்கினார்கள். நான் அவர்களை திட்டி ஆடு இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டாம் என கூறினேன்.. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வித்தியாவினால் வளர்க்கப்பட்ட நாயினால், கொலை செய்யப்பட்ட வித்தியாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது