ஒரே பிரசவத்தில் மனைவிக்கு நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், வேறுநாட்டில் இருந்த கணவர் குழந்தைகளை செல்போன் மூலம் பார்த்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஆண்டனி புர்ச். இவர் மனைவி மேரி பேட். ராணுவ அதிகாரியான ஆண்டனி தனது பணி காரணமாக குடும்பத்தை விட்டு பலநாட்கள் பிரிந்து தான் இருப்பார்.
மேரி கர்ப்பமாக இருந்த நிலையில் ஆண்டனி தென் கொரியாவில் இருந்துள்ளார். இந்த சமயத்தில் மேரிக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது.
குழந்தைகளுக்கு ஹென்றி, மோலி, நதானியல் மற்றும் சாமுவேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 6000 மைல் தூரம் தொலைவில் இருந்த ஆண்டனி நவீன தொழில்நுட்பமான செல்போன் வீடியோ மூலம் தனது குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து மனைவி மற்றும் குழந்தைகளை உடனடியாக நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அமெரிக்காவுக்கு சென்று அவர்களை ஆண்டனி பார்த்துள்ளார்.