தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை குறித்து மக்களிடம் தெரியப்படுத்தி, டாட்டூ போட்டுக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த காட் காலிங்கர்(24) என்பவர் மொடலாக இருக்கிறார். இவர் சமீபத்தில் தனது கண்ணில் டாட்டூ போட்டுக்கொண்டதால் கண் பார்வையை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவர் உருக்கமாக கூறியுள்ளதாவது, கண்ணில் டாட்டூ வரைந்துகொள்வது இன்று சாதாரணமானது. இப்படி ஒரு கொடூரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
டாட்டூ போட்டுக்கொண்ட பிறகு என் கண்ணிலிருந்து ஊதா நிறத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
உடனே மருத்துவமனைக்குச் சென்றேன். சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினேன். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது. கண் பெரிதாக வீங்கியது. இமையைத் திறக்க முடியாமல் போனது. டாட்டூ மை கார்னியாவை பாதித்துவிட்டதால், பார்வையும் குறைந்தது.
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்தும் என் பழைய பார்வையை மீட்க முடியவில்லை. கண்ணும் பழைய நிலைக்கு வரவில்லை. இன்னும் வெளிர் ஊதா நிறத்தில்தான் இருக்கிறது.
என் பார்வை முழுமையாக மீண்டும் கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
இன்னும் மோசமாவதற்குள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளப் போகிறேன். அதற்கு முன்பு எனக்கு ஏற்பட்ட பாதிப்பை உலகத்திடம் சொல்லிவிட முடிவு செய்தேன். என்னைப்போல் எதிர்காலத்தில் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதால் என்னுடைய படங்களை வெளியிட்டிருக்கிறேன்.
கண்களில் டாட்டூ போடும் முன்பு ஆயிரம் தடவை யோசியுங்கள். தகுதியான, தரமான டாட்டூ கலைஞரா என்று விசாரித்துக்கொள்ளுங்கள்.
முடிந்தால் கண்களில் டாட்டூ போடுவதைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.