எகிப்து கடற்பகுதியில் ஆயுதக் குவியலுடன் வடகொரிய கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவுடன் உலக நாடுகள் வர்த்தகத் தொடர்புகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை தடைவிதித்திருக்கும் நிலையில், ஆயுதக் குவியலுடன் எகிப்து கடற்பகுதியில் இந்த கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குறித்த கப்பலில் ரொக்கெட்டால் செலுத்தப்படும் 30,000 குண்டுகள் இருந்துள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்து நோக்கி வடகொரிய கப்பல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த ஆயுதங்கள் எகிப்து தொழிலதிபர்கள் கொள்முதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஐ.நா சபை வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கும் முன்னரே மில்லியன் டொலர் பெறுமதியுள்ள ஆயுதங்களை எகிப்து தொழிலதிபர்கள் வடகொரியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்தும் எகிப்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.