கோலாலம்பூர் விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இவர், சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில், இந்தோனீஷியாவை சேர்ந்த, 25 வயதான சிட்டி அய்ஷ்யா மற்றும் வியட்நாமை சேர்ந்த 29 வயதான தேயன் தி ஹீயோங் ஆகியோர், அவரின் முகத்தில், விஷத்தனமை வாய்ந்த வி.எக்ஸ் ரசாயனத்தை பூசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள ஷா அலாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இரு பெண்களும், தங்கள் தரப்பில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், இவை அனைத்தையும், தொலைக்காட்சி ஏமாற்றும் நிகழ்ச்சி என நாங்கள் எண்ணினோம், வட கொரிய அதிகாரிகள் தங்களை ஏமாற்றி இதை செய்ய வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த மரணத்திற்கும் தங்களும் எவ்வித தொடர்பும் இல்லை என வட கொரியா மறுத்துள்ளது.
இதற்கிடையில் இந்த பெண்களின் வழக்கறிஞர்கள், கூறியதாவது, உண்மை குற்றவாளிகள், மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாக எங்கள் தரப்பில் வாதாட உள்ளோம் என கூறியுள்ளனர்.