முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும்.இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் சருமத் துளைகளிலிருக்கும் விடாப்பிடியான அழுக்கு வெளியேறி உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.
சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். இள நீரிலுள்ள கஞ்சியை சருமத்தில் பூசிப்பாருங்கள். சருமம் ஜொலிக்கும்.
சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.
வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்துபொடி செய்து கொள்ளுங்கள்.
அதனை பாலில் குழைத்து முகத்தில் தடவி கழுவினால் வேர்க்குரு, பருக்கள், கரும்புள்ளிகள் வராமல், முகமும் கருத்துப் போகாமல் இருக்கும்.